நிருபர்: வணக்கம்...
நடிகை: வணக்கும்... வாணக்கும்...
நிருபர்: என்ன மேடம்... சினிமாவில நல்ல தமிழ் பேசுகீறிங்க
நடிகை:எனக்கு டமில் பிடிக்கும்...அது எனக்கு ஹேப்பிட் ஆயிடிச்சு...
நிருபர்: நீங்க எப்படி ஓபனா பேசுறீங்க...
நடிகை: எங்கிட்ட மறைக்கிறது என்ன இருக்குது?
நிருபர்:நீங்க ஓரே புருஷனோட... பத்து வருஷமா வாழறீங்களாமே, உண்மையா?
நடிகை: இல்லை...இல்லை..
நிருபர்: அப்புறம்...இவர் எத்தனையாவது கணவர்?
நடிகை:இவரையே,மூணுமுறை டைவர்ஸ் செய்து...கல்யாணம் செய்துட்டேன்
நிருபர்:பாராதி ராஜாவோட... என்ன பிரச்சனை?
நடிகை:அவர்...ஆதிவாசி வேடத்தில் இலை தழையெல்லாம் கட்டிட்டு நடிக்க சொன்னார்.எனக்கு அதிகமான உடை பிடிக்காது
நிருபர்:அவர் தானே... அறிமுகப்படுத்தினார்.நீங்க பழசையெல்லாம் மறந்துட்டீங்கன்னு பேசிக்கிறாங்களே! அது உண்மையா?
நடிகை:அப்படியெல்லாம் கிடையாது.இன்னும் பிச்சைக்காரி வேடத்தில் நடித்து கொண்டுதானே இருக்கேன்.
நிருபர்:அதனால் தான்.பிச்சைக்காரனை கல்யாணம் பண்ணீக்கிட்டீங்களாமே ஏன் அப்படி?
நடிகை:பத்திரிக்கையில் ஆயிரம் கிசு...கிசு வரும்.அவர் இப்போ பணக்கார பிச்சைக்காரர்.என்னை கதாநாயகியா போட்டு படம் கூட தயாரிக்கிறாரே!
நிருபர்:இந்த படத்தில் காட்சியில முழு நிர்வாணமா காட்டி நடிச்சு இருக்கீங்காலாமே?
நடிகை:கதைக்கு தேவைப்பட்ட சதையை காண்பிக்கிறது தப்பில்லையே?
நிருபர்:அப்படி என்ன கதை?
நடிகை:நான் குழந்தை பருவத்தை நினைச்சு பார்க்கிற சீன்... என்ன பண்றது?
நிருபர்:அப்ப... படத்தின் பேர் என்ன?
நடிகை:சீச்சீச்சீ...
நிருபர்:அப்படி ஆபாசமா?
நடிகை:அப்படியெல்லாம்...இல்லீங்க தலைப்பே அதுதான்...
நிருபர்: படம் வெற்றி பெற சாமிக்கிடே வேண்டிக்கிட்டீங்களா?
நடிகை:இல்லை... நம்பிக்கை இல்லை
நிருபர்:நீங்க முற்போக்கு நடிகையா?
ந்டிகை: ஆமாம்.எனக்கு "மூட" பழக்கம் இல்லை.
தொடரும்...
(தலையங்கம் படித்தீர்களா?... மேலே வாருங்கள்...)
தலையங்கம்
ஹஸாரே! அசாராதே...அசாராதே...

லோக்பால் என்பது அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைப்படும் அமைப்பு.
அப்பாடா.. இந்த சட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் எந்த ஒரு குடிமகனும் நேரிடையாக பிரதமர் உள்ளிட்ட அனைவரின் மேலும் புகார் அளிக்கலாம். இதனால், தேவையற்ற பயம் மக்களிடையே குறையும்; ஊழல் பெருச்சாளிகளுக்கு தேவையான பயம் அதிகரிக்கும்.ஊழல் குற்றச்சாட்டுகள் ஒராண்டுக்குள் முடிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட ஊழல் பெருச்சாளிக்கு கண்டிப்பாக தண்டனை உறுதி.
இது போன்ற அமைப்பு கர்நாடகத்தில் பெல்லாரி சகோதரர்களின் கண்களில் பெல்லாரி வெங்காயத்தை கசக்கி பிழிந்து விட்டது. இப்படிப்பட்ட அமைப்பு ஒரு மாநிலத்தில் சிறப்பாக செயல்படும் போது ஏன் இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடியாது?
தற்போது பரிசீலிக்கப்படும் லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது.அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும்.
உதாரணமாக ஸ்பெக்ட்ரம் ராசாவின் குற்றச்சாட்டு ஒருவேளை நிரூபிக்கப்பட்டால்( சும்மா...உதாரணத்திற்காகத்தான்,இது நடக்க போவதில்லை) அந்த சொத்தை அரசு எடுத்துக்கொள்ளாது. பரம்பரைக்கு ஒருவன் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றால் மற்றவர்கள் ராஜபோக வாழ்க்கை வாழலாம்.இது அருமையான வாழ்வாதாரம்.இது தான் இன்றைய நிலை.
அரசியல்வாதி மீது புகார் செய்பவர் அதற்கான ஆதாரத்திற்கு எங்கே செல்வார்? மேலோகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.
இப்படிபட்ட ஒரு லோக்பால் சட்டத்தை வைத்துக்கொண்டுதான் மத்திய அரசு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது. அதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் ஹசாரே உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்.
லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்க்காக உருவாக்கப்படும் கூட்டுக்குழுவில் அரசு தரப்பு, சமூக அமைப்புகள் ஆகியன் சார்பில் சரிசமமான எண்ணிக்கையில் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டனர்.
ஆனால்.அந்த குழுவிற்கு தலைவராக ஹஸாரேயை நியமிக்க முடியாது என அரசு மறுத்து விட்டது.இதில் அரசுக்கு என்ன தயக்கம்? ஒரு ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஒரு அரசியல்வாதி தலைமை பொறுப்பை ஏற்கும் போது ஏன் ஒரு சாதாரண குடிமகன் தலைமை பொறுப்பை ஏற்க கூடாது.
ஒரு சுப்பனும் கருப்பனும் சமம் என்று வாய்சாடல் வீசும் அரசியல் வாதிகளின் நாற்றம் தெருவிற்கு வந்து விடும் என்ற பயமா?
உண்ணாவிரதத்தை கைவிட கோரிக்கை விடுவதை விடுத்து ஊழலை கைவிட அரசியல் வாதிகள் தயாராகும் காலம் வந்து விட்டது.
வெறும் மேனியாய் சுற்றிய காந்தீயம் ஊழல் மேனியை சுற்றி வளைத்திருக்கிறது.நமது கைகளை கொடுப்போம் கழுத்தை இறுக்குவோம்...
மக்கள் விளக்குகளை ஏந்தும் போதே இறங்கி வாருங்கள்; இல்லையெனில் விளக்குமாறு ஏந்தி வரவேண்டியிருக்கும்.
வாழ்க்கை வைக்கும் பரீட்சைகள் வித்தியாசமானவை. யாரைப் பார்த்தும் காப்பியடிக்க முடியாது.
7 'குட்டு' மேளம்...:
போடு முத வேட்டை.. அட சே முத வெட்டை
கலக்கல் காமெடி..
அட் ர சக்கை... மோதிர விரல் குட்டா? ஆகா...
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
நடிகைகளைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே பண்ணி கலாய்ச்சு இருக்கீங்க..
ஏதாவது நடிகை மீதான தனிப்பட்ட தாக்குதல் இதுல இருக்கா # டவுட்.
உங்கள் ஆதங்கத்தை வித்தியாசமாக பதிவு செய்திருக்கிறீர்கள்... உங்கள் சேவை தொடரட்டும்...
கருத்துரையிடுக